நடிகர் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வரும் படம் மைக்கேல். இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன், என்டர்டெய்னர் கதையம்சத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் மாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் நடிக்கவுள்ளார். சமீபகாலமாக இயக்குனர் கெளதம் மேனன் நடிப்பதில் ஆர்வம் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.