கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4,250 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், மணிமுத்தா நதி அணையிலிருந்து இன்று முதல் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளதாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து மணிமுத்தா நதி அணையிலிருந்து 79 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் பயன்பெறுவார்கள்.