கனடாவில் வசிக்கும் பெண் ஒருவர் லாட்டரியில் விழுந்த பரிசால் பணக்காரராக மாறியுள்ளார்.
கனடாவில் எட்மண்டன் என்ற பகுதியைச் சேர்ந்த சகிதா நாரயண் என்ற பெண்ணுக்கு லாட்டரி 6/49-ல் ரூ.2,62,71,56,223,45 ( $ 16,511,291.40 ) பரிசாக விழுந்துள்ளது. இந்த நிலையில் சகிதா லாட்டரி பரிசு விழுந்திருப்பது தனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சகிதா அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அவரிடம் வீட்டில் சமையலறையை அமைப்பது உள்ளிட்ட பல யோசனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் கார் ஒன்றை வாங்கி தனது இளைய மகளுக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருப்பதாக சகிதா கூறியுள்ளார்.