நேற்று ஜலதாபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பயங்கரவாதிகள் முன்னெடுக்கும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கிடையே தலிபான்களும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு பக்கம் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று ஜலதாபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இந்த தகவலை சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்த சம்பவம் தொடர்பில் எந்த விதமான தகவலும் தெரிவிக்கவில்லை.