சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது .
சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் வில்லாரியல்- மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்த 2-வது பாதி ஆட்டத்தில் 78-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து முதல் கோலை பதிவு செய்தார்.
இதனால் 1-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் 90 -வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியில் ஜடோன் சாஞ்சோ கோல் அடித்தார். இதில் இறுதிவரை போராடிய வில்லாரியல் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.இறுதியாக 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது.