Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கும் 18% GST… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

இன்ஜினியரிங் எம்பிஏ உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் 18% ஜிஎஸ்டி செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலையின் கீழ் பயிலும் மாணவர்கள் தற்போது மறு மதிப்பீடு செய்வதற்கு ஒரு தாளுக்கு  700 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனிடையே மாணவர்களுக்கு நிர்வாக ரீதியில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சிலவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது, விடைத்தாளின் நகல் பெறுவது, எந்த தேதியில் மாணவர் பட்டம் பெற்றார் என்பதற்கு சான்று அளிக்கும் சான்றிதழ்கள் போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதில் தேர்வு கட்டணம், மறு மதிப்பீடு செய்வதற்கான கட்டணம், புரோவிஷனல் சான்றிதழ், டிகிரி சான்றிதழ்கள், மறுஆய்வு கட்டணம் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |