வெனிசுலாவில் நடைபெற்ற தேர்தலில் சுமார் 20 கவர்னர் பதவிகளை ஆளும் கட்சி கைப்பற்றியதையடுத்து அந்நாட்டின் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வெனிசுலாவின் ஜனாதிபதியாக இடதுசாரி நிக்கோலஸ் என்பவர் உள்ளார். இதனையடுத்து வெனிசுலாவிலுள்ள பல பகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற தேர்தலில் தற்போது வெனிசுலாவை ஆட்சி செய்யும் சோஷலிஸ்ட் கட்சி சுமார் 20 கவர்னர் பதவிகளை வென்றுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் அதிபரான இடதுசாரி நிக்கோலஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கிய கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது வெனிசுலாவில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சி சுமார் 20 கவர்னர் பதவிகளை வென்றது “மிகவும் அழகான வெற்றி” என்று பதிவிட்டுள்ளார்.