Categories
மாநில செய்திகள்

ரசாயனங்களை கையாள சிறப்பு பயிற்சி…. ரூ.22 லட்சம் ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!

தமிழக சட்டப் கூட்டத் தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு அரசு ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சியை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அலுவலர்களுக்கு நவீன உற்பத்தி செயல்முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி உலகத்தரமான பாதுகாப்பு வல்லுனர்கள் மூலம் அளிக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் 1765 ஊறுவிளைவிக்கும் ஆலைகள் மற்றும் 10,673 அபாயகரமான தொழிற்சாலைகளும் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Categories

Tech |