Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கியது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவைத் தலைவர் யார் என்பது இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக செயற்குழு பொதுக் கூட்டம், உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் மாவட்ட செயலாளர்களின் கருத்து இதில் கேட்கப்படுகின்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் சார்பில் இருந்து பல்வேறு முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |