‘சிவகுமாரின் சபதம்’ படம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் இல் டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே ஹிட் நாயகனாக வலம் வந்தார்.
மேலும், இவர் இயக்கிய ”சிவகுமாரின் சபதம்” சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் இல் வரும் டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
.@hiphoptamizha’s #SivakumarinSabadham premiering on @DisneyPlusHS – December 3rd. #IndieRebels @TGThyagarajan @it_is_madhuri pic.twitter.com/cmChqPNtS2
— Sathya Jyothi Films (@SathyaJyothi) November 23, 2021