Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதசாமி கோவிலில்… 1 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை… அதிகாரிகள் தகவல்…!!

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலின் உண்டியல் காணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ராமநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் உண்டியல் பணம் எண்ணப்பட்டுள்ளது. இந்த பணி அம்மன் சன்னதியில் உள்ள திருக்கல்யாண மடபத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு கோவில் இணை ஆணையர் பழனிகுமார் தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம், ராமநாதபுரம் ஆய்வாளர் தங்கையா, கோவில் மேற்பார்வையாளர் சீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் உண்டியல் எண்ணும் பணியில் பேஸ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், ராமநாதன், ஆய்வாளர்கள் முருகானந்தம், பிரபாகரன், வீரசேகரன் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.  அதன்படி கோவில் உண்டியலில் 1 கோடியே 21 லட்சத்து 99,250 ரூபாயும், 94 கிராம் தங்கமும், 1 கிலோ 900 கிராம் இருந்துள்ளது. மேலும் இது 2 மாத உண்டியல் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |