குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தா பிரியா. இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் இளநிலை சமூகப்பணி பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், இவருக்கும் பார்த் படாலியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு திருமணமும் செமஸ்டர் தேர்வும் ஒரே நாளில் வந்தது.
குழப்பமடைந்த ஷிவாங்கி, தன்னுடைய குடும்பத்தினரிடம் தன் நிலைமையை எடுத்து கூறி தேர்வு எழுத சம்மதம் பெற்றார். இந்தநிலையில் சிவாங்கி திருமணக்கோலத்தில் தேர்வு அறைக்குச் சென்று செமஸ்டர் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த பின்னர் பார்த் பட்டாலியாவுக்கும்-ஷிவாங்கிக்கும் திருமணம் நடைபெற்றது.