சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவை தலைவர் யார் என்பது குறித்து இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.