சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் நவம்பர் 25ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநாடு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.