Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொய் வாக்குறுதி கொடுத்தோம்னு ஒத்துக்கோங்க”… இப்பயே போராட்டத்த விட்டுறோம்… அண்ணாமலை விளாசல்…!!!

பொய் வாக்குறுதிகளை கொடுத்து தான் ஆட்சிக்கு வந்தோம் என்று திமுகவினர் ஒப்புக்கொண்டால், இப்போதே போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. ஆனால் தமிழக அரசு தற்போது வரை பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்காமல் உள்ளது. இதனை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்தினர். இதில் தலைமை தாங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “உங்களால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்றால் அதன் மூலம் வரும் 30 ரூபாய் வருமானம் எதற்காக? தமிழக அரசுக்கு அக்கறை இருப்பது டாஸ்மாக் மீது மட்டுமே தவிர, மக்கள் மீது அல்ல.

இப்போது ஸ்டாலின் விலையை குறைக்கவில்லை என்றால் தேர்தலின்போது பேசிய பேச்சிற்கும், ஓட்டுபோட்ட மக்களுக்கும் என்ன மரியாதை. தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். தேர்தல் வாக்குறுதி இல்லாத பிற மாநிலங்களில் பெட்ரோல் விலையை குறைத்து உள்ளார்கள். எனவே திமுக பொய் சொல்லிதான் ஆட்சிக்கு வந்தீர்கள் என்று சொல்லுங்கள்; நாங்கள் போராட்டத்தினை நிறுத்திக்கொள்கிறோம் என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |