தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2401750, 94990 55941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.