அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வார் மம்தா பானர்ஜியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவை தோற்கடிக்க கூடிய திறன் உள்ள ஒரே ஒரு தலைவர் என்றால் அது மம்தா பானர்ஜி தான். வங்காளத்தில் பாஜகவை மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார்.
மேலும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய கோரிக்கைகளுக்கு மத்திய அரசை பணிய செய்தது. அதனைப் போலவே வருகின்ற 2024 ஆம் ஆண்டில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.