பிக்பாஸ் பிரபலம் ஆரவ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் ஆரவ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, இவர் கடந்த வருடம் நடிகை ராஹே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.