பயிர்கடன் மற்றும் நகைகடன் தள்ளுபடி செய்ததற்கான அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தில் சுமார் 2,700க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் பயிர்கடனும், 150க்கும் மேற்பட்டவர்கள் நகைகடனும் பெற்றிருந்துள்ளனர். இதனையடுத்து அதிமுக அரசு அந்த கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை வெளியிட்டது.
இந்நிலையில் விவசாயிகள் அதற்க்கான சான்றிதழை எடுத்து கூட்டுறவு சங்கத்தில் கேட்டபோது தங்களுக்கான அரசாணை வரவில்லை என அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே பயிர்கடன் மற்றும் நகை கடன்களுக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.