அயோத்தி வழக்கில் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக , சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாமா ? வேண்டாமா ? என்பது குறித்த முடிவு எடுக்க உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஒருமித்த குரலாக சீராய்வு மனுவையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ள இருப்பதாக ஏற்கனவே இந்த சன்னி வக்பு வாரியம் அறிவித்திருந்தது.
இது தவிர மற்ற இஸ்லாமிய மத அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மிக முக்கியமான ஒரு அமைப்பாக பார்க்கக் கூடிய சன்னி வக்பு வாரியத்தின் இந்த முடிவு என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.இந்த விவகாரத்தில் பிரச்சனைகளை மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. நீதிமன்றம் மூலம் ஒரு தீர்வு என்பது வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் வாயில் அதை அப்படியே எடுத்துக் கொள்வோம் என்றும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.