Categories
மாநில செய்திகள்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்… கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!!!

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த 19ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவை எடுக்க வைத்தார்கள் என்று கூற எனக்கு பயமாக உள்ளது என்று உருக்கமாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தெரிவித்து வந்த நிலையில், தற்போது கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன கோஷங்கள் முழங்க பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர். இந்த புகாரில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |