திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நவல்பட்டு பகுதியில் ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க எஸ்.ஐ.பூமிநாதன் முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்ததால் கொலையாளிகள் சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்தனர். அந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில்ரோந்து பணியின் போது ஆடு திருடியவர்களை பிடிக்கும் முயற்சியில் வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவித்தபடி ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதன் பிறகு “மூத்த அண்ணனாக உங்களைப் பார்க்கிறேன்” என்று பூமிநாதன் மனைவி கண்ணீர் மல்க முதல்வரிடம் கூறினார்.