நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரதமரின் கரிப் கல்யாணம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வந்தாலும் வெளி சந்தையில் உணவு தானியங்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் கோடை காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி அல்லது கோதுமை திட்டம் நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தத் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.