தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை இலியானா. அதற்குப் பின் தமிழில் நடிக்காமல் தெலுங்கில் நடித்து வந்தார். பின் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘நண்பன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை ஒல்லி பெல்லி இடுப்பால் கவர்ந்திழுத்தார்.
இதையடுத்து வேறு எந்தத் தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இந்தியில் மட்டுமே ஆர்வமாய் நடித்து வந்தார். இந்தியிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வராமல் இருக்கவே, மீண்டும் தெலுங்கு திரையுலகில் தஞ்சமடைந்துள்ளார், இலியானா.
‘மெலிதான தேகத்தோடு காணப்படும் இவர் சிறு வயதில் அவரது உருவத்தால் பலரது கேலிக்கும் ஆளாக்கப்பட்டு சில காலம் மிகவும் துயரத்தோடு’ இருந்ததாக கூறியுள்ளார். மேலும் பல புகைப்படங்களில் அவரது உடலின் சில பாகங்கள் பெரிதாய் இருப்பதைப்போல் மார்ஃபிங் செய்யப்பட்டிருந்ததாகவும், அதனால் விரக்தி அடைந்ததாகவும் தெரிவித்தார், இலியானா.
மன நலத்துக்கான சர்வதேச அமைப்பு ஒன்றில் பேசிய இலியானா, ‘தனக்கு பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர் இருந்ததாகவும், மனநல ஆலோசகரைச் சந்தித்தப்பின் அந்தக் கோளாறில் இருந்து வெளி வந்ததாகவும்’ தெரிவித்தார்.