Categories
உலக செய்திகள்

“துணிகளை எடுக்கச் சென்ற மூதாட்டி!”.. 18-ஆவது மாடியில் தலைகீழாக தொங்கிய அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவில் 18 ஆவது மாடியில் தலைகீழாக தொங்கிய மூதாட்டியை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவில் உள்ள ஜியாங்கு மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 83 வயது மூதாட்டி, துணிகளை எடுப்பதற்காக 18வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரின் கால் தடுக்கி, துணி போடும் கம்பியில் சிக்கி தலைகீழாக தொங்கினார். எனவே, இது தொடர்பில் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரமாகப் போராடி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். அதிஷ்டவசமாக அவர், எந்தவித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |