தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.