காவலாளி போல் உடையணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் படி காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவலாளி உடையுடன் இரவு நேரத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பதும், பல்வேறு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவர் சந்தேகம் வராமல் இருப்பதற்காக இரவு நேரத்தில் காவலாளி போல உடை அணிந்து கடைகளில் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிந்தராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.