Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்ட நிலையில் அதை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிதுள்ளது.

Categories

Tech |