Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தக்காளி விலை உயர்வு மழையால் தான்…. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…!!!!

தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கீழ் தாக்களில் வெறும் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மழையால் தான் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது தான். தக்காளி வரத்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 600 மெட்ரிக் டன் தக்காளி தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |