Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பலமாக வீசிய காற்று…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கிய மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் மணிமுத்து என்பவருடன் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விட்டது. அப்போது கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு கணேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.

ஆனால் மணிமுத்து நீரில் மூழ்கினார். இதுகுறித்து கணேசன் சக மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமுத்துவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலோர காவல் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் காணாமல் போன மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |