பள்ளி ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் தனது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்றிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பூஜை, படுக்கையறையில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தது.
மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 2.5 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் 1 பவுன் தங்க தோடு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கலாம் எனவும் ஜெய சீலன் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெயசீலன் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.