Categories
மாநில செய்திகள்

தமிழக நியாயவிலை கடைகளில் காய்கறிகள் விற்பனை…. இதோ விலை பட்டியல்…. நீங்களே பாருங்க….!!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆப்பிள் விலைக்கு நிகராக ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசின் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதனால் மக்களின் துயரைப் போக்கும் வகையில்  தக்காளி மற்றும் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி கூட்டுறவுத் துறை நடத்தும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனைப் போலவே இதர காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும்  அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தக்காளி மட்டுமல்லாமல் இதர காய்கறிகளின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழக மக்கள் பயனடைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |