Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? முதியவர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்திங்கநல்லூர் பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் திருமண தகவல் நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சின்னதுரை திருமண தகவல் நிலையத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னத்துரையில் உடலை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |