ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி ”பாகுபலி” படத்தை இயக்கியதன் மூலம் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரானார். இவர் இயக்கத்தில் தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ”ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.