நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் தமிழக ஊரக புத்தாக்க திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் துறைசார் வல்லுநர் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சிக்கு ஒரு நபர் என்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஊராட்சி கூட்டமைப்பில் வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து இந்தத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் இளநிலை பட்டப்படிப்பு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராகவும் அல்லது குடும்ப உறுப்பினர் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் அவர்களின் வயது 25 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் ஆன்ட்ராய்ட் மொபைலையும் பயன்படுத்த தெரிய வேண்டும் என்றும் அனுபவம் உள்ள தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வட்டார தலைவர்களான புதுச்சித்திரம் மீனாட்சி, திருச்செங்கோடு நிர்மலா, பள்ளிபாளையம் ரவிகுமார் மற்றும் மோகனூர் செந்தில் குமார் ஆகியோர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.