Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் ராஜினாமா …!!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிரா_வில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளின் இடையே இருந்த முதல்வர் பதவி பகிர்வில் பாஜக உடன்படாததால் யாரும் ஆட்சி அமைக்க முன்வர வில்லை. இதை தொடர்ந்து பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது.அதே நேரத்தில் சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தன.ஆனால் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் அஜித் பவாரை பயன்படுத்தி ஆட்சி அமைக்கும் முடிவில் களமிறங்கிய பாஜக ஆளுநர் முன்னிலையில் ஆட்சி அமைத்தது. இதில் தேவிந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் , அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

இதனையடுத்து பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிராக சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதில் நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக செய்வதறியாது உள்ளது.இந்த சூழ்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பட்னாவிஸ்ஷை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பதவியேற்ற 4 நாட்களில் அஜித் பவார் ராஜினாமா செய்ததார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில் , மகாராஷ்டிரா மக்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்கே வாக்களித்தனர். தேர்தல் முடிவில் மக்களின் முழு ஆதரவு எங்களுக்கே கிடைத்தது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்று சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை . சிவசேனாவை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜகவின் எண்ணிக்கை இல்லாமல் குறைந்த பிறகு சிவசேனா பேரத்தில் இறங்கியது.ஆட்சியமைப்பதற்காக சிவசேனா பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தொடங்கியது என்று தெரிவித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

Categories

Tech |