Categories
சினிமா தமிழ் சினிமா

தெருவில் இருப்பவர்கள், சட்டம் இயற்றலாமா ? வரம்பு மீறி பேசிய கங்கனா ரனாவத்…. எப்.ஐ.ஆர். போட்டு, வாய்ப்பூட்டு போட்ட போலீஸ்

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் முடிவை விமர்சித்து நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது வருந்தத்தக்கது, வெட்கக்கேடானது, மற்றும் முற்றிலும் நியாயமற்றது எனவும் குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக தெருவில் இருப்பவர்கள் சட்டம் இயற்ற தொடங்கிவிட்டார்கள் என்று கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டிருந்தார். மேலும் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு இருந்தார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களை அவரது காலனியில் போட்டு நசுக்கினார் எனவும் மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இந்த பதிவுக்கு பலரும் கடும் கண்டனங்களைத் தொடுத்தனர். இதனையடுத்து சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவினர் அளித்த புகாரை அடுத்து மும்பை காவல் துறையில் கங்கனா ரனாவத் துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |