Categories
அரசியல் தேசிய செய்திகள்

முடிவுக்கு வந்தது…… ”ஏமாந்து போன பாஜக”….. நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை ..!!

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றது பாஜக. இதில் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் , துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றனர்.

சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைத்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் மகாராஷ்டிரா ஆளுநரின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சியினர் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. தன்னால் பெரும்பானமையை நிரூபிக்க முடியாது என்று எழுந்த நிலையில் துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது. இதையடுத்து சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |