ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சி நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா எம்.எல்.ஏ. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில் மாற்றம் செய்த போது ராஜேந்திர குடாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மந்திரியான பிறகு முதல் முறையாக ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் உள்ள மக்களிடம் உரையாடினார்.
அப்போது அவரிடம் மக்கள் தரமான சாலைகளை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர் பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் சுட்டிக் காட்டி “எனது தொகுதியில் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கண்ணங்கள் போன்று இருக்க வேண்டும்” என்று அவர் காமெடியாக கூறினார். எனவே பாலிவுட் உலகின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப் கண்ணம் குறித்து ராஜஸ்தான் மந்திரி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.