வாட்ஸ்அப் நிறுவனம் தனது யூசர்கள் எப்போது புதுமையுடன் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணற்ற அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் சில புதிய அப்டேட்கள் வர உள்ளது. இது யூசர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
அவ்வகையில் வாட்ஸ் அப்பில் தவறுதலாக அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் delete for everyone ஆப்ஷனை பயன்படுத்த தற்போது 1 மணி 8 நிமிடம் 16 நொடிகள் கால அவகாசம் உள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தும் கால அளவை 7 நாட்களாக நீட்டிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாய்ஸ் மெசேஜை வேகமாக கேட்பதற்காக fast forward செய்யும் ஆப்ஷனையும் வேகப்படுத்தலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.