மத நல்லிணக்க வார விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத நல்லிணக்க வார விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் மீட்புப்படை வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரிகுப்பம் வரை சென்றுள்ளனர். இதை பேரிடர் மீட்பு படை பிரிவில் மருத்துவ அலுவலரான சைலேந்திர ராத்தோர் தொடங்கி வைத்துள்ளார்.
இவற்றில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என 60-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து சேலம் மாவட்டத்திலுள்ள கருங்கல்பட்டி பகுதியில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டமாகி உள்ளது. பின்னர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 20 பேர் சேர்ந்த ஒரு குழு சேலத்திற்கு விரைந்தனர்.