மழை காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கூட்டுறவு நடத்தும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ தக்காளி 75 முதல் 100 ரூபாய் வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்கள் வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் பின்வரும் காய்கறிகளை வாங்கிக் கொள்ள முடியும்.
இதில் முருங்கைக்காய் விலை மட்டும் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ஏழை, எளிய மக்கள் காய்கறிகளை வாங்கி சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர்.