ஜெய்பீம் படத்திற்கு சீமான் ஒரு விளக்கம் அளித்துள்ளார். இது திரைத்துறையில், தமிழக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் உருவப்படத்தை திறந்து வைத்த சீமான், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. இதற்கு மாற்று தீர்வு இல்லை. இதனை ஏன் இதுவரை யாரும் சரி செய்யவில்லை. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஜெய்பீம் திரைப்படத்தை வைத்து மறைக்கிறார்கள்.
அதனை தேசிய பிரச்சினையாகவும், சர்வதேச பிரச்சினையாகவும் மாற்றியுள்ளனர். மேலும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது. இது பாரதிய ஜனதாவிற்கு பெருமையில்லை, தொடர்ந்து போராடிய விவசாய மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. 5 மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இதில் ஒரு இடம் கூட வெல்ல முடியாது என்பதற்கான தோல்வி பயத்தால் இந்த சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். மேலும் பாதிப்புகள் குறித்து அதிகாரத்தில் இருப்பவர்கள் வாய்திறக்க மாட்டார்கள், முதல்வர் பதில் சொல்ல வேண்டாம், ஆனால் துறை ரீதியாக உள்ள அதிகாரிகள் அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கலாம்” என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அதேசமயம் ஒரு தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றது. இந்நிலையில் சீமான் கொடுத்துள்ள விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.