ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையத்தில் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி. கருப்பணன் பேசுகையில், ‘ விவசாயிகள் எந்த நேரமும் பாம்புக்கடி, பசு கன்று ஈனும்போது ஏற்படும் பிரச்னை போன்ற கால்நடை சார்ந்த பிரச்னைகளுக்கு கால்நடை ஆம்புலன்ஸ் எண் 1926க்கு (உண்மையான எண் 1962) அழைக்கலாம் என தவறுதலாக கூறினார். உடனே மேடையிலிருந்த கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆம்புலன்ஸ் எண் 1926 இல்லை, 1962 தான் உண்மையான எண்’ என்றார்.
அதையடுத்து அமைச்சர் கருப்பணன், ’ஆம்புலன்ஸ் நம்பர் எளிதாக இல்லை, எனக்கு மண்டையில் ஏறவில்லை. எனவே கால்நடை ஆம்புலன்ஸ் நம்பரை 109 என மாற்ற வேண்டும்’ என்றார். அவரின் இந்தப் பேச்சு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.