தமிழக ஊரக பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 2020-2022ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,00 மிகாமல் உள்ளது என்று வருவாய்த் துறையிடம் இருந்து வருமானச் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். இந்தத் தேர்விற்கு 9.12.2001 முதல் 20.12.2001 தேதி வரை விண்ணப்பிக்கலாம் .
அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் காலத்தில் உதவி தொகை ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படும். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்தவேண்டும். மேலும் தேர்வர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.