Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் எகிறும் விலை…! ஆனால் இங்கு மட்டும் இல்லை…. படையெடுக்கும் பொதுமக்கள் …!!

தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து வித சமையலுக்கும் அத்தியாவசிய தேவையான தக்காளியின் விலை தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கிலோ 100,120,140,160 ரூபாய் என்று மேல் நோக்கியே பயணித்து வருகிறது. இந்நிலையில் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று அனைத்து பண்ணை பசுமை கடைகளிலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சில்லரை சந்தையில் தக்காளி கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பண்ணை பசுமை கடைகளில் கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச் சந்தையை விட தக்காளி மலிவாக கிடைப்பதால் பண்ணை பசுமை கடைகளுக்கு படை எடுத்துள்ள மக்கள், தமிழக அரசின் விலைக்குறைப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பொது மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக முதல்கட்டமாக நாளொன்றுக்கு 15 டன் தக்காளியை தமிழக அரசு கொள்முதல் செய்து பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. வரும் நாட்களில் வெளிச் சந்தைகளில் தக்காளியின் விலை ஏற்றத்தின் அடிப்படையில், கொள்முதலை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |