தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அதற்கு ஏற்றது போல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மக்கள் செய்து கொள்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.