இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மைனர் ஒருவருடன் வாய்வழி உறவு கொள்ள வற்புறுத்துவது மோசமான பாலியல் குற்றமாகாது என்று அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி அணில் குமார் தீர்ப்பளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 10 வயது சிறுவனுடன் வாய்வழி உறவு கொண்ட நபருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையில் 7 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்துள்ளார். எங்கும் பாலியல் குற்றங்கள் பெருகி உள்ள நிலையில் இப்படியான தீர்ப்புகள் குற்றங்களை தடுக்க உதவுமா? என்று கேள்வி எழும்பி உள்ளது.