தனியார் கல்லூரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த கல்லூரியில் வேலை பார்த்த தாளாளரின் இறுதி சடங்கில் சம்பத் கலந்துகொண்டார். இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி புரிந்த கல்லூரியின் தாளாளர் இறந்ததால் சம்பத் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனை சம்பத் தனது நண்பர்களிடம் தெரிவித்து அழுதுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சம்பத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.