அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்கலத்தை மோதவிட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல்லின் பாதையை திசை மாற்றும் சோதனையில் தற்போது ஈடுபட்டுள்ளது.
பூமியில் சுமார் 6 1/2 கோடி வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் விழுந்ததால் டைனோசர் உட்பட பல உயிரினங்களும் அழிவை சந்தித்தது. ஆனால் விஞ்ஞானிகளோ இது போன்ற நிகழ்வுகள் 10 முதல் 20 கோடி வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் பூமியில் மீண்டும் இதுபோன்ற ஒரு அழிவு ஏற்படாமல் தடுப்பதற்காக DART எனப்படும் Double Asteroid Redirection Test சோதனையை மேற்கொள்ள விண்கலம் ஒன்று ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் கலிபோர்னியாவின் Vandenberg விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணுக்கு சென்றுள்ளது.
மேலும் இந்த விண்கலம் சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று பூமிக்கு மிக அருகாமையில் சுற்றி கொண்டிருக்கும் விண்கற்களில் ஒன்றான Dimorphos விண்கலம் மீது மோதி அதனுடைய சுற்றுவட்ட பாதையே மாற்றி அமைத்துவிடும் என்று நாசா கூறியுள்ளது. அதேசமயம் அடுத்த வருடம் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் இந்த நிகழ்வு நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.